அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; பள்ளிக்கூட மாணவன் பரிதாப சாவு

அம்மாபேட்டை அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-06-23 21:00 GMT

அம்மாபேட்டை அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தார்.

மாணவன்

அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி முகாசிப்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு ஆர்த்தி, அகல்யா என்ற 2 மகள்களும், ஹரிஹரசுதன் (வயது 15) என்ற மகனும் உள்ளனர். இதில் ஹரிஹரசுதன் சங்ககிரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து 9-ம் வகுப்பு வரை படித்து வந்தார். இந்த ஆண்டு பூனாச்சி அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு சேர்ந்து இருந்தார்.

சாவு

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து பூனாச்சியில் உள்ள கடைக்கு மொபட்டில் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினார். பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், ஹரிஹரசுதனின் மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மொபட்டில் இருந்து ஹரிஹரசுதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிஹரசுதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்