அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தற்கொலை

Update: 2022-08-17 15:59 GMT

அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). அவருடைய மனைவி வெண்ணிலா (44). கூலி தொழிலாளிகள். இவர்களுடைய மகள்கள் விஷ்ணு பிரியா (22), நேத்ரா தேவி (20), மனோரஞ்சிதம். இதில் விஷ்ணு பிரியாவுக்கு திருமணமாகி விட்டது. நேத்ரா தேவி 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேத்ராதேவி நேற்று முன்தினம் விஷ்ணு பிரியாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நேத்ராதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்