நாசரேத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது

நாசரேத்தில் தொழிலாளிக்கு கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-23 10:05 GMT

நாசரேத்:

நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் மகாராஜன் (வயது 40). இவர் லேத் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினரான குலசேகரன்பட்டினம் புதுமனை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மாரிமுத்து (23) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்

சம்பவத்தன்று கனகராஜ் தெருவில் உள்ள தனது வீட்டில் மகாராஜன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மாரிமுத்து திடீரென்று மகாராஜனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் மாரிமுத்து தான் ஒளித்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். காயங்களுடன் அவரிடம் இருந்து தப்பிய மகராஜன் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் காயங்களுடன் இருந்த மகாராஜனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்