நயன்-விக்கி வாடகை தாய் விவகாரம்: விசாரணை குழு அமைப்பு

நயன்-விக்கி தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-13 07:00 GMT

சென்னை,

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருந்தார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பதே அது. அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

நயன்-விக்கி தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன.

மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.

வாடகை தாய்க்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா? தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க முடிவு விசாரணை குழு செய்துள்ளது. மருத்துவமனையில் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்