அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா

சங்கராபுரம் பகுதி அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நடைபெற்றது.

Update: 2022-09-28 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி துர்க்கை அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்