லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நவராத்திரி பத்து நாள் உற்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து மலர் மாலை மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி தங்க கேடயத்திலும், அமிர்தவல்லி தாயார் வெள்ளி கேடயத்திலும் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர். இதில் சோளிங்கர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.