மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது

Update: 2023-02-16 18:45 GMT

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தென்னக பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாசாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. தொடக்க விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினருமான மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, ராஜ்குமார் எம்.எல்.ஏ., மூத்த பரத கலைஞர் லீலா சாம்சன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கவுரவ தலைவர் விஸ்வநாதன், தலைவர் பரணிதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பாண்டமங்கலம் சங்கீத கலா ரத்னா கிருஷ்ணகுமார் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாட்டியாஞ்சலியில் கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்களின் பரதம், ஒடிசி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்