விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் நேற்று ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை நினைவு கூறும் வகையில் குருமூர்த்தி நாயக்கன்பட்டி. குந்தலப்பட்ட.ி வீரசெல்லையாபுரம.் சொக்கலிங்கபுரம.் ஆகிய கிராமங்களில் காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து கிராம மக்களிடையே ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தை பற்றி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் செய்திருந்தார். இதனை தொடர்ந்து கடம்பங்குளம் கிராமத்தில் நடந்த இயற்கை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து மருந்துகளை வழங்கினார். மேலும் விருதுநகரில் புனரமைக்கப்பட்டுள்ள கோட்டைப்பட்டி சின்னப்பள்ளிவாசலுக்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிவகுருநாதன் மற்றும் வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.