தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-28 15:21 GMT

சென்னை,

27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதி அரையிறுதி போட்டியில் ரெயில்வே அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

5 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்கு பாராட்டுக்கள். தோல்வியுறாத சாதனையுடன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த சாதனை மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுப்பணி எங்களை பெருமைப்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து அன்பான நம் மாநிலத்திற்கு மேலும் பாராட்டுகளை கொண்டு வரட்டும்.

Tags:    

மேலும் செய்திகள்