நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

செங்கோட்டை அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது

Update: 2022-11-20 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுடர் மணி வரவேற்று பேசினார். விழாவில் இடைநிலை ஆசிரியர் சிவசுப்பிரமணியன், ஆசிரியை ஜோதிலட்சுமி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலகர் அருள்தாஸ், ஆசிரியர் முஹம்மது இக்பால், உடற்கல்வி இயக்குனர்கள் சஞ்சய்காந்தி, ராமசாமி மற்றும் வைகுண்டசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்

முடிவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர் சிவபிரதாப் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்