நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வெள்ளையாபுரம், டி.மீனாட்சிபுரம் பகுதியில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியும், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அழகர்சாமி, வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், டி.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், திருவிருந்தாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேல்முருகன், உதவித்திட்ட அலுவலர் சப்பாணி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.