கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கல்லூரியின் நாட்டு நலத்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-11-01 12:26 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலத்திட்டம் சார்பாக இந்தியாவில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் அ.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குகன், துணை முதல்வர் விஜயகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நாட்டு நலத்திட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழியை வாசித்து ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் சுதா, புவனேஷ், ராஜதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்