பொள்ளாச்சி
தேசிய ஒற்றுமை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி வருவாய் துறை சார்பில் மாரத்தான் நடைபெற்றது. இதை தாசில்தார் வைரமுத்து தொடங்கி வைத்தார். மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் தொடங்கிய மராத்தான், காந்தி சிலை வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ், தடகள சங்க செயலாளர் சுரேஷ், சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.