தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூரில் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் தீர்த்தமலை வரவேற்று பேசினார். கூட்டத்தில் சென்னையில் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில மாநாடு நடத்துவது, அதில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.