தேசிய விளையாட்டு தின போட்டிகள்

நாகையில் நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் 200 பேர் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-29 18:45 GMT

நாகையில் நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் 200 பேர் கலந்து கொண்டனர்.

தேசிய விளையாட்டு தினம்

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

19, 25, மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

100 மீட்டர் ஓட்டப்போட்டி

19 மற்றும் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாலிபால், 100 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளும், 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 1 கிலோ மீட்டர் நடைபோட்டி, 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், செஸ் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.

இந்த விளையாட்டு போட்டி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசு

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஜானி வர்கீஸ் டாம் பரிசுகளை வழங்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்