தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெயர்களை சேர்க்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெயர்களை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-08-24 19:24 GMT

கடலூர் அருகே பில்லாலி தொட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடலூர் அருகே பில்லாலி தொட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தோம். தற்போது இந்த திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள எங்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. எங்களின் பெயர்களையும் இந்த திட்டத்தில் இணைத்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஊரில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு வேலை வழங்கி பதிவு செய்து விட்டார்கள். அதை நீக்கி உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களை இணைத்து எங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்