ஆலங்குளம்,
சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் தேசிய நல்லிணக்க உறுதிமொழி எடுக்கபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் குன்னக்குடி முத்துவாழி தலைமை தாங்கினார். கல்லூரி டீன் பிரபுதாஸ் குமார் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கபட்டது. சாதி, இன, மத, மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும், பாடுபடுவோம் என்றும், மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தை மூலமாகவும், அரசியலமைப்பு சட்டவழிமுறைகளை பின்பற்றியும், தீர்த்து கொள்வோம் எனவும் உறுதிமொழி எடுக்கபட்டது.
இதில் எஸ்.எம்.எஸ். பாலிடெக்னிக் முதல்வர் ராஜநாயகன், கல்லூரி நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி பொன்னுச்சாமி, கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள். மாணவர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.