தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-01 15:03 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, அங்கன்வாடி பணியாளர்களால் வரையப்பட்ட கோலங்கள், கண்காட்சி அரங்கை அவர் பார்வையிட்டார்.

மேலும், கலெக்டர் தலைமையில், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவையொட்டி மாவட்டத்தில் ஒரு மாத காலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்