உளுந்தூர்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

உளுந்தூர்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

Update: 2023-05-04 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா மகா வித்யாலயம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூாியில் இயற்பியல், வேதியியல் துறை சார்பில் நானோ தொழில்நுட்பத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால பயன்பாடுகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் பழனியம்மாள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். கல்லூரி இணை செயலாளர் பிரம்மச்சாரிணி பிரேம பிரணா மாஜி வாழ்த்துரை வழங்கினார். இயற்பியல் துறை தலைவர் முருகவேல், வேதியியல் துறை தலைவர் காஞ்சனா ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாண்டிச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை இணை பேராசிரியர் சூரஜ்குமார் சின்ஹா, அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை இணை பேராசிரியர் செந்தில் வேலன் ஆகியோா் கலந்து கொண்டு நானோ தொழில்நுட்பம் பற்றி சிறப்புரையாற்றினா். இதில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்