மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை கலெக்டர் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, உதவும் உள்ளங்கள் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.