விருத்தாசலத்தில்ரூ.27 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிதேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
விருத்தாசலத்தில் ரூ.27 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கூரைப்பேட்டை பகுதியில் இருந்து விருத்தாசலம் நகரத்திற்கு செல்லும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் ரூ.27 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை சென்னை வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், திட்ட பணிக்கான வரை படத்தை பார்வையிட்டேதாடு, கட்டுமான பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து விருத்தாசலம்- வீ.கூட்டு ரோடு வரை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு மற்றும் புதுப்பிக்கும் பணிகளையும் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் பார்வையிட்டார்.
மேலும் விருத்தாசலம் மற்றும் விளாங்காட்டூர் பகுதிகளில் விபத்தை தடுக்கும் வகையில் சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மேம்பாடு செய்யும் பணிகள் ரூ.8 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ளது. இந்த மேம்பாடு பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி, விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.