மணப்பாறையில் குப்பையில் வீசப்பட்ட தேசியக்கொடி
மணப்பாறையில் குப்பையில் தேசியக்கொடிவீசப்பட்டது.
மணப்பாறை, ஆக.25-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் வீடு, வணிக நிறுவனம் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடியை ஏற்றினர். இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மக்கள் தேசியக்கொடியேற்றினர். சுதந்திர தினம் முடிந்த பின்னர் தங்களது வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றிய தேசியக்கொடியை அவிழ்த்து பத்திரமாக வைத்தனர். இந்நிலையில் மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் குப்பையில் நேற்று தேசியக்கொடி ஒன்று கிடந்தது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. தேசியக்கொடி என்பது நம் உணர்வில் கலந்த ஒன்று என்ற நிலையில் தேசியக்கொடியை அவமரியாதை செய்துள்ளது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.