தேசிய கொடி விற்பனை மையம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடி விற்பனை மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-10 12:48 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகின்ற 15-ந்தேதி 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நடைபெற உள்ளது. அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு மாதம் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினரால் தற்காலிக தேசிய கொடி விற்பனை அரங்கு அமைக்கப்பட்டது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட செல்பி ஸ்டாண்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கல்பனா, சந்திரசேகர், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்