மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரான தேசிய கொடி

மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரான தேசிய கொடியை கலெக்டர் வெளியிட்டார்.

Update: 2022-08-11 16:03 GMT

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் தேசிய கொடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் மாவட்டத்தில் இதற்காக 15 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வரை 2 லட்சம் கொடிகள் தயார் செய்து முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் 2 நாட்களில் 1½ லட்சம் கொடிகள் தயார் செய்யப்பட்டு விடும்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று தேசிய கொடிகளை வெளியிட்டார். அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இவை வழங்கப்பட்டு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த தேசிய கொடி பறக்க விடப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்