ஏலகிரி மலை உச்சியில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
ஏலகிரி மலை உச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி மற்றும் ஏலகிரிமலை பகுதியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகம், வணிக கடைகளில் தேசிய கொடியை ஏற்றினர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை உச்சியில் சமூக ஆர்வலர் தேசிய கொடியை ஏற்றினார். இதனை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.