வேலூர் கோட்டையில் அரைகம்பத்தில் பறந்த தேசிய கொடி
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவையொட்டி வேலூர் கோட்டையில் அரைகம்பத்தில் தேசிய கொடி பறந்தது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தபோது சுட்டு்க் கொல்லப்பட்டார். இதற்கு உலக தலைவர்கள் கண்டனம் மற்றும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். ஷின்ஜோ அபே மறைவையொட்டி இந்தியாவில் நேற்று ஒருநாள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். தேசிய துக்கம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதால் வேலூர் கோட்டை கொத்தளத்தில் தேசியகொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது.