பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று தேசிய கொடியுடன் வந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து அவர்கள் கூறும்போது " அறிவொளி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வசித்து வருகிறோம். நீண்ட நாட்களாக மாற்று இடம் கேட்டு போராடி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்துகிறோம்" என்றனர். இதையடுத்து அவர்களுடன் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில் தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்திய 8 பேரை, போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.