மாணவிகளுக்கு தேசியக்கொடி வினியோகம்
மாணவிகளுக்கு தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் இன்று(சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு சரவணன் ஏற்பாட்டின் பேரில், சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த் தேசியக்கொடிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர சபை துணை தலைவர் கார் கண்ணன், நகரமன்ற உறுப்பினர் மகேஷ் குமார், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.