தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தின விழாவை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை பறக்க விட்டு கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசியக்கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் தர்மபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.25 ஆகும். www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
தேசியக்கொடி தபால்காரர் மூலமாக வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக் கொடியை பெற்று சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.