அரசு பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள்

நீடாமங்கலம் அரசு பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2023-02-14 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் சம்பத், வட்டார சுகாதார ஆய்வாளர் கவுதமன், ஊராட்சி தலைவர் ஜெ.கே.பி.குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்