தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம்
கொள்ளிடம் அருகேதேசிய டெங்கு விழிப்புணர்வு தினம்
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன் வரவேற்றார். மருத்துவ அலுவலர் வைஷாலி, மாவட்ட மலேரியா அலுவலர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் கலந்துகொண்ட அனைவரும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.