தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-11 19:39 GMT

ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர்கள் பேரவை சார்பில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜெயங்கொண்டம் மறைவட்ட தலைவர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் பிரான்சினாள் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்