தேசிய சிலம்பம் போட்டி: கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய சிலம்பம் போட்டியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-11-24 18:45 GMT

கோவில்பட்டி:

பெங்களூரில் லயோலா கம்போசிட் கல்லூரியில் தேசிய சிலம்பம் போட்டி நடந்தது. கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஜய், அனீஷ்பாலா, ரோஹித் ஆகியோர் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி. கே. பழனிச் செல்வம் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், பொருளாளர் சண்முகராஜா, தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்