நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ விழா

நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் 14-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது. இதில் 300 இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசைத்தனர்.

Update: 2023-08-14 18:29 GMT

நாத உற்சவ விழா

கரூர் அருகே உள்ள நெரூரில் சவுந்திரநாயகி உடனாகிய அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், நேற்றுமுன்தினம் 14-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணியளவில் அக்னீஸ்வரர் சுவாமிக்கு மங்கல இசையுடன் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 8.30 மணியளவில் நாதஸ்வரம், தவில், வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங், தபேலா, லயம் இசை கலைஞர்களின் நாத சங்கமம் நடைபெற்றது. காலை 11 மணியளவில் `என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே' என்ற தலைப்பில் சொற்பொழிவும், மதியம் 1.30 மணிக்கு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் குழுவினரின் தேவார பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மாலை 3.30 மணியளவில் எது பக்தி? என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

300 இசைக்கலைஞர்கள்

இதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் நாதஸ்வரம், தவில் வித்வான்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பாடல்களை இசைத்தனர். இந்த இசை நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்றுமுன்தினம் காலை முதலே நெரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலந்துகொண்டவர்கள்

இதில், வியாசர் பைனான்ஸ் கார்த்தி, பியூபா குரூப் புஷ்பராஜன், ஹைபவர் பவர் டெக்ஸ் சுப்பிரமணி, அன்னை வித்யாலயா பள்ளி சேர்மன் மணிவண்ணன், பிரணவ் சிட்பண்ட்ஸ் பாலசுப்பிரமணியன், ஜெய்கந்த முருகன் கிரானைட் பிரபு, எல்.ஐ.சி. நடராஜன், எல்.ஐ.சி. சவுந்தர்ராஜன், ஸ்ரீ முருகன் அண்ட்-கோ ரெங்கராஜ், அக்னீஸ்வரா செல்வம், டி.என்.என்.நந்தகோபால், ஹரிஷ், தனலெட்சுமி மார்பிள்ஸ் ஈஸ்வர் பட்டேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவை காண வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நெரூர் அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்