நடராஜர் நாட்டிய வித்யாலயா பள்ளி தொடக்கம்

பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நடராஜர் நாட்டிய வித்யாலயா பள்ளி தொடக்கம்

Update: 2023-09-19 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஸ்ரீநடராஜர் நாட்டிய வித்யாலயா பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆசிரியர் சக்கரபாணி வரவேற்றார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் மாதவராமன் நன்றி கூறினார். விழாவில் அனைத்து நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்