போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-07-01 18:06 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் போலீஸ் துறை சார்பில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் கவியரசன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பேசினார். அப்போது அவர், மாணவர்கள் ஒருங்கிணைந்து தீய செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என கூறினார். மேலும் தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன் சமூகத்துக்கு பெரும் ஆபத்தை போதை பொருட்கள் விளைவிக்கின்றன. கல்வி மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என கூறினார். ஆப்பிரிக்க நாடுகளில் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகம் இருப்பதால் அந்த நாடுகள் முன்னேறாமல் உள்ளன என கூறினாா். பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், போதை பொருள் இல்லா உலகம் படைக்க நம்மால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்ற உறுதிமொழியை வாசிக்க மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் முதுகலை ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்