நாராயண சுவாமி கோவில் திருவிழா

அம்பை அருகே நாராயண சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-12-10 18:50 GMT

அம்பை:

அம்பை அருகே உள்ள கோடாரங்குளம் நாராயண சுவாமி கோவில் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மதியம், மாலை அய்யாவுக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதர்மம், 10 மணிக்கு அய்யா பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, இரவு அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி வருதல், நேற்று அய்யா பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது.

10-ம் திருநாளான 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை பாபநாசத்தில் இருந்து சந்தனக்குட ஊர்வலம், சிறப்பு பணிவிடை, மதியம் 12 மணிக்கு அன்னதர்மம், மாலை சிறப்பு பணிவிடை, இரவு 10 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெறுகிறது. 12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை சிறப்பு பணிவிடை, மதியம் 12 மணிக்கு மாப்பு கேட்டல், மாலை 3 மணிக்கு அய்யா செம்பொன் பவளத்தேரில் ஏறி வீதிஉலா வருதல், வாணவேடிக்கை, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோடாரங்குளம் ஊர் பொதுமக்கள், தர்மபதி அன்புக்கொடி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்