கீழப்பாவூர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி-சுவாதி பூஜை

கீழப்பாவூர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி-சுவாதி பூஜை நடைபெற்றது.

Update: 2023-05-05 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் காட்சி தரும் அபூர்வ நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மூலமந்திர ஹோமம், வேதபாராயணம், பூர்ணாகுதி, மாலையில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், தொடர்ந்து 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ர நாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. நேற்று சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்