பஞ்ச நரசிம்மர் கோவில்களில் நரசிம்மர் ஜெயந்தி விழா
திருவெண்காடு அருகே பஞ்ச நரசிம்மர் கோவில்களில் நரசிம்மர் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது
திருவெண்காடு:
திருவெண்காடு பகுதியில் திருக்குரவலூர் உக்கர நரசிம்மர், மங்கை மட வீர நரசிம்மர், திருநகரி யோக, ஹிரண்ய நரசிம்மர் மற்றும் திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவில்கள் என 5 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) நரசிம்மர் ஜெயந்தி விழா நடக்கிறது. இதனை ஒட்டி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.