அங்காளபரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை
உலக நன்மை வேண்டி அங்காளபரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ராஜாளிகாடு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் இன்றி வாழவும் லட்சார்ச்சனை விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அங்காளம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவித்து வண்ணமலர்களால் அலங்கரிக்கபட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.