'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழகஅரசின் உத்தரவின்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் தூய்மை பணிகள், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை குறித்த 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியம் பழவனக்குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல், திடக்கழிவுமேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பவர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதேபோல் புலிவலம், கீழகாவாதுகுடி, தண்டலை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளில் நடந்த 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.