செட்டித்தாங்கல் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டம்

செட்டித்தாங்கல் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-20 17:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம், செட்டித்தாங்கல் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், குப்பைகளை அள்ளி தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்