நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வயலூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
குடவாசல்:
குடவாசல் ஒன்றியம் வயலூர் ஊராட்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் ரமா செல்வம், துணைத் தலைவர் குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது பொதுமக்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது ஊராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். நமது தூய்மை காவலரிடம் வழங்கும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். அரசின் இந்த நம்ம ஊரு சூப்பரு என்ற உன்னதமான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அரசுக்கு பெருமை சேர்ப்போம் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.