திருவொற்றியூரில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

‘நம்ம திருவொற்றியூர் மாரத்தான் போட்டி 2023’ என்ற தலைப்பில் தாங்கல் பீர் பைல்வான் தர்கா குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது.

Update: 2023-01-23 05:57 GMT

திருவொற்றியூர் என்.டி.ஓ.குப்பம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியை திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 6 வயது முதல் 10 வயதுடைய பள்ளி குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கலந்து கொண்டு டோல்கேட் முதல் எல்லையம்மன் கோவில் வரை 3 கிலோ மீட்டர் தூரமும், 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு டோல்கேட் முதல் பட்டினத்தார் கோவில் வரை 5 கிலோ மீட்டர் தூரமும் ஓடி வந்தனர்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடி வந்த தங்கள் பிள்ளைகளை அவர்களது பெற்றோர் உற்சாகப்படுத்தி அவர்களுடன் ஓடி வந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பணம், சான்றிதழ் மற்றும் கேடயத்தை திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரா மற்றும் 3 உலக சாதனை படைத்த வீரமங்கை முத்தமிழ்செல்வி ஆகியோர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்