நெல்லை கண்ணன் பெயர் சூட்டப்பட்டது

டவுன்-குறுக்குத்துறை சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டப்பட்டது.

Update: 2023-08-18 19:14 GMT

தமிழறிஞர் நெல்லை கண்ணன் நினைவாக, நெல்லை டவுன் ஆர்ச் அருகில் உள்ள வளைவு முதல் குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று நெல்லை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நெல்லை டவுன்- குறுக்குத்துறை சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நெல்லை கண்ணன் மகன்களான எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான சுகா, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் கலந்து கொண்டு நெல்லை கண்ணன் சாலை பெயர் சூட்டி, பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர். பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

விழாவில் மண்டல தலைவர்கள் ரேவதிபிரபு, மகேஸ்வரி, கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ், சந்திரசேகர், செயற்பொறியாளர் வாசுதேவன், சுகாதார அலுவலர் இளங்கோ, அருணா கார்டியா கேர் டாக்டர் அருணாசலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் கனி, எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், கிருஷி, கவிஞர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்