நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கிய 74 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கிய 74 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன தணிக்கை
நாமக்கல் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், உமா மகேஸ்வரி, நித்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 3,364 வாகனங்களில் 605 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் அதில் ரூ.56¾ லட்சம் வரியும், ரூ.80 லட்சம் இணக்க கட்டணமும் வசூல் செய்யப்பட்டது.
தகுதிச்சான்று
அதேபோல் 314 வாகனங்களுக்கு ரூ.1 கோடியே 76 லட்சம் இணக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தகுதிச்சான்று புதுப்பிக்காமல், அனுமதி சீட்டு இல்லாமல், வரி செலுத்தாமல் என போக்குவரத்து வாகன விதிகளை மீறி இயக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாகனங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.