குதிரை வாகனத்தில் நல்லாண்டவர் வீதி உலா

குதிரை வாகனத்தில் நல்லாண்டவர் வீதி உலா வந்தார்.

Update: 2023-08-12 19:54 GMT

மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் ஆண்டவர் கோவில் பகுதியில் மான்பூண்டி ஆற்றங்கரையில் பிரசித்திபெற்ற நல்லாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிபெருந்திருவிழா பால்குடத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நல்லாண்டவர் கோவில் உற்சவர் மான்பூண்டி நல்லாண்டவர், முத்துக்கருப்பண்ணசாமி, ஏழு சப்த கன்னிமார்கள், லாட சன்னியாசி, வெள்ளையம்மாள் - பொம்மியம்மாள் உடனாய மதுரை வீரன், பரிகாரர், ஏழு கருப்பண்ணசாமி, பேச்சியம்மாள், ஓங்கார விநாயகர், தெப்பக்குளக்கரை முருகன் உள்ளிட்ட சாமிகளுக்கு நேற்று முன்தினம் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை நல்லாண்டவர் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள தெய்வங்கள் மின்முத்துப்பல்லகில் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அழ.வைரவன், பரம்பரை அறங்காவலரும், பொய்கைபட்டி ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்துவீரலெக்கைய நாயக்கர் தலைமையில் முன்னாள் மணியம் சண்முகம் அனைத்து கிராமங்களின் ஊர் நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள், கண்ணுடையான்பட்டி ஊராட்சித் தலைவர் தங்கமணி முருகன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சந்திரசேகர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்