நாகூர் ஆண்டகை சிறப்பு பிரார்த்தனை

பனைக்குளம் கடற்கரைச் சாலையில் நாகூர் ஆண்டகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2023-02-06 18:36 GMT

பனைக்குளம். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் கடற்கரைவழிச் சாலையில் ஏ.கே.எஸ்.ஹவுஸ் வளாகத்தில் ஆண்டுதோறும் நாகூர் ஆண்டகை காதர் வலியுல்லா நாயகத்தின் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கந்தூரி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இதற்கான விழா நேற்று காலை ஏ.கே.சாகுல்ஹமீது ஏற்பாட்டில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பனைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முஹைதீன் ஆலீம் தலைமையில் பனைக்குளம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் இமாம்கள் ஒன்றிணைந்து சிறப்பு பிரார்த்தனை ஓதினார்கள்.

இதில் பனைக்குளம் முஸ்லிம் நிர்வாக சபை, முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நாகூர் தர்காவின் கலிபாக்கள் அலி ஹசன் ஷாகிப் மவுலானா, முஹம்மது சுஐபுதின் சாஹிப் பைஜி உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆலிம்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்