பாலம் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில்-கோவை ரெயில் ஈரோடுடன் நிறுத்தம்
பாலம் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில்-கோவை ரெயில் ஈரோடுடன் நிறுத்தப்படுகிறது
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தில் உள்ள ஈரோடு-தொட்டியபாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான ரெயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை வரை இயக்கப்படும் பகல்நேர எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.16321) இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் ஈரோடு ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.