நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரம்பலூரில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் உப்போடையில் செல்வகணபதி, பாலமுருகன், நாகமுத்து மாரியம்மன், மூப்பனார், முனீஸ்வரன், எல்லை கருப்பு மற்றும் சப்த கன்னிமார்கள் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலையில் கோவில் வளாகத்தில் பல்வேறு பூஜைகளுடன் 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் கோபுர விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவிலில் நாகமுத்து மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.